Bharatha Nadu Katturai In Tamil
பாரத நாடு தமிழ் கட்டுரை
பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்றார் பாரதியார். உலகிலுள்ள மிக தொன்மையான வாழும் கலாச்சாரங்களில் காலத்தால் பழையதும் உயிராற்றலினால் புதியதுமான பாரத கலாச்சாரம் இந்த பாரத மண்ணிற்கே உரிய பெருமை. இந்த பாரத நாடு பல விதங்களில் இந்த உலகிற்கோர் உன்னதமான எடுத்துக்காட்டு. இந்தக் கட்டுரையில் பாரதத்தின் பெருமைகள் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.
பாரத நாடு தமிழ் கட்டுரை
பாரத நாடு ஒரு அழகிய வளமான நாடு. உலகின் அனைத்து விதமான இயற்கை அழகுகளையும் இங்கு காணவியலும். நெடிதுயர்ந்த மலைகள், நீண்டு பாயும் ஆறுகள், வற்றாத நீர்நிலைகள், செழிப்பான காடுகள் மற்றும் வயல்கள், வாழ்வதற்கேற்ற சமவெளிகள், பாலைவனங்கள், கடல்கள் என இந்த உலகிலுள்ள அனைத்து நில அமைப்புகளும் இங்கு காணப்படுகின்றன.
பாரதம் பரந்து விரிந்த தேசம். இந்த தேசத்தின் மக்கள் பல மொழிகள் பேசி, பல விதமான உடைகள், பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டிருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்த தேசத்தின் தனித்தன்மை. பல மாநிலங்களில் வாழும் பல மொழி பேசும் மக்களை இந்தியர் என்ற உணர்வே ஒன்றிணைக்கிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக குடியரசு இந்தியாதான். இந்த பாரத நாட்டில் இன்று மொத்தம் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. மத்தியிலும் மாநிலத்திலும் மக்களாட்சி அமைந்து மக்கள் தங்களது ஆட்சியாளர்களை கிராம பஞ்சாயத்து முதல் நாட்டின் மிக உயரிய பதவி வரை பொதுத்தேர்தல்கள் மூலம் தேர்வு செயகின்றனர்.
மிகவும் பழமை வாய்ந்த கலாச்சாரமாயினும், இந்த பாரத மண்ணில் இன்று அறிவியல், பொருளாதாரம், தொழில், விவசாயம், வியாபாரம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியன வானளாவி வளர்ந்து நிற்கின்றன. வாழுவதற்கு சுவர்கத்தைப் போன்ற இந்த பாரத மண்ணில் இல்லாதது இல்லை எனலாம். பெருமை மிகு தேசத்தின் மக்களாகிய நாம் பெருமையுடன் இந்த தேசத்தைப் பேணிக்காக்க வேண்டும்.
Bharat Essay in Tamil
“Bharat is an ancient and glorious land and you are its sons – never forget this truth”, said poet Bharati. Among the most ancient living cultures of the world, the civilization of India is the oldest in terms of age and the youngest in terms of its vibrant existence. Such a glorious tradition is the proud characteristic of the Indian soil. India is an example to the world for a number of reasons. Here we discuss some of the wonderful merits of India.
India is a beautiful country. We can see all kinds of natural beauties on this land. India has lofty mountains, long winding rivers, abundant water sources, seas, deserts, fertile forests and fields, and the most wonderful plains to support life.
India is an expansive land. The people of this country speak several languages, practice different local cultural traditions and wear different kinds of dresses. Yet, they are all united by a feeling which always reminds them “We are Indians”. Unity in diversity is the most startling characteristic of this land.
India is the largest republic and democracy on this earth today. In total, there are 28 states and 8 union territories in India. There are elected governments ruling the country both in the state and central governments. Right from the village panchayats to the highest post of the central government, each of the ruling posts are filled through public elections.
Though it is an age old civilization, India has a thriving science, technology, economics, business, medicine, agriculture, and other activities. India is verily the heaven to live. We can say there is nothing that the people of this land lack. Being the inheritors of this glorious tradition, we must take care of this country as our very breath.