Desiya Thalaivargal In Tamil Katturai

Desiya Thalaivargal In Tamil Katturai

தேசிய தலைவர்கள் கட்டுரை

இந்த இந்திய மண் பல அரிய தலைவர்களை இந்த தேசத்திற்கும் உலகிற்கும் தந்துள்ளது. தேசத்தலைவர்கள் பல வகைப்படுவார்கள். ஆன்மீக தலைவர்கள், தேசிய இயக்க தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், அரசியல் தலைவர்கள், அறிவியலாளர்கள், சமூக சிந்தனைவாதிகள், சீர்திருத்தவாதிகள், ஆட்சியாளர்கள் மற்றும் பலர். இந்தக் கட்டுரையில் நாம் மூன்று தேசிய தலைவர்களை பற்றிக்காண்போம்.

லால், பால், பால் எனப்படும் மூன்று தேசியத் தலைவர்களை நாம் என்றென்றும் மறக்கவியலாது. இந்திய தேசிய இயக்கத்தில் இந்த மூன்று தலைவர்களும் இணைந்து பங்கேற்று இந்தியாவின் சுதேசி இயக்கத்தை முன்னெடுத்து சென்றனர். இந்தியர் யாவரும் இந்திய பொருட்களையே வாங்குவோம், வெளிநாட்டில் தயாரித்த பொருட்களை புறக்கணிப்போம் என்பதே சுதேசி இயக்கத்தின் நோக்கமும் செயல்பாடும். இந்திய சுதந்திர போரில் சுதேசி இயக்கத்தின் பங்கு அளப்பரியது.

லால் என்று வழங்கப்பட்ட தலைவர் லாலா லஜபதி ராய் என்பவராவார். இவர் ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில் 28 ஜனவரி 1865 இல் பிறந்தார். சுதேசி இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றுவதற்கு முன்னரே, இந்தியா சுய சார்புடன் இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் பஞ்சாப் நேஷனல் பேங்க் என்ற வங்கியை இந்திய முதலீட்டில் துவக்கிய பெருமை இவரையே சாரும்.

பால் என்று அழைக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர் ஆவார். ஒருமுறை இவர் பள்ளியில் படித்து வந்த போது வகுப்பில் நிலக்கடலை தோலைப் போட்டுவிட்டு யார் போட்டார் என்பதைக் கூறாததனால் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டது. இந்த தண்டனையை ஏற்க மறுத்த பால கங்காதர திலகர் “தவறு செய்யாத நான் எதற்காக தண்டனை பெற வேண்டும்?” என்று கூறிவிட்டார். பிற்காலத்தில் இந்திய சுதந்திர போரில் பால கங்காதரரின் பங்கு மிகவும் உன்னதமான ஒன்று.

பால் எனப்படும் சுதேசி இயக்கத் தலைவர் பிபின் சந்திரபால்  ஆவார். இவர் வங்காள மாநிலத்தில் பிறந்தார். இவரும் இவரது தந்தையாரும் நிரம்பப் படித்தவர்கள். முற்போக்கு சீர்திருத்த சிந்தனைகளால் உந்தப்பட்டு பிபின் சந்திர பால் சுதேசி இயக்கத்தில் பங்கேற்று அரும்பணிகள் செய்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர். இவரது பேச்சும் எழுதும் மக்களை உறக்கத்திலிருந்து எழுப்பி தேசப்பணியை செய்ய வைத்தன.

National Leaders Essay in Tamil

This Indian soil has given birth to a large number of leaders who have benefited the country and also the world. There are different kinds of leaders like spiritual leaders, national movement leaders, freedom fighters, reformers, thinkers, social movement leaders, scientists, politicians, and others. In this essay let us discuss about three inspiring national leaders.

We can never forget the three champions of Swadeshi movement namely Lal, Bal and Pal. These three leaders worked together and provided a fitting leadership to the Swadeshi movement. The objectives of the Swadeshi movement is to buy only Indian goods and boycott the foreign goods. The contribution of the Swadeshi movement for the freedom struggle was crucial.

The leader fondly called as Lal was Lala Lajpati Roy. He was born in the United Punjab state on 28 January 1865. Even before participating in the Swadeshi movement, Lal felt India must be self-reliant. He started the Punjab National Bank purely with Indian investment.

The leader called as Pal was Bal Gangadhar Tilak. Once when he was a student at the school, some students had littered the class with the peels of groundnuts. The teacher could not find out the culprit and hence punished the whole class. However, Bal was far beyond accepting the rationale behind the punishment. Fighting for justice, he said he would never accept the punishment since he was innocent. At a later stage, his contribution to the Indian freedom struggle was phenomenal.

The leader called as Pal was Bipin Chandra Pal born in Bengal. He and his father were scholars. He was propelled by revolutionary thoughts and he did a marvelous job in India’s freedom struggle. He was a journalist and a writer. His speech and writings inspired the Indian masses and made them work for the country’s independence.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.