எங்கள் ஊர் கட்டுரை
நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கபுரிதான். குழந்தை பருவத்தில் வாழ்க்கை மறக்க முடியாதது மற்றும் சொந்த கிராமம் அல்லது நகரம் நமக்கு கொடுத்த நினைவுகள் நம் நினைவுகளில் என்றென்றும் நிற்கின்றன. எனது கிராமம் எனது வளர்த்து, ஒரு மனிதனாக என்னை வடிவமைத்துள்ளது. நான் எப்போதும் எனது கிராமத்திற்கு நன்றி செலுத்துகிறேன். எங்கள் கிராமத்தின் மிக அற்புதமான பாரம்பரியத்தை மரபுரிமையாகப் பெறுவதில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்த ஈச்சனூர்தான் என் கிராமம். எனது கிரமம் பற்றி இந்தக் கட்டுரையை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
எங்கள் ஊர் கட்டுரை
ஈச்சனூர் என்ற எனது கிராமத்தின் பெயர் வரைபடத்தில் பிரபலமாக இருக்காது; ஆனால் இந்த ஊர் பல்வேறு துறைகளில் பிரகாசித்த சில குறிப்பிடத்தக்க நபர்களை உருவாக்கியுள்ளது. சுமார் 200 வீடுகளைக் கொண்ட ஒரு சிறிய கிராமம் ஈச்சனூர். எங்களுடைய ஊர் ஓர் விவசாய சமூகம். எமது கிராமத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் விவசாயம், பண்ணை மற்றும் இவற்றோடு தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
ஈச்சனூர் அதன் மூன்று பக்கங்களிலும் மூன்று ஏரிகளால் சூழப்பட்டுள்ளது. மறுபுறம் சிறிய மற்றும் பெரிய கிராமங்களால் சூழப்பட்டு மாவட்ட நெடுஞ்சாலையிலிருந்து ஒரு மைல் தூரத்தில் எமது ஊர் அமைந்துள்ளது. எமது கிராமத்தில் மொத்தம் ஆறு தெருக்கள் உள்ளன. ஈச்சனூரில் உள்ள வீடுகளின் வகை தென்னை ஓலை குடிசைகள், ஒட்டு வீடுகள், மற்றும் செங்கல் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்கள் வரை இருக்கும்.
எங்கள் கிராமத்தில் பூவாத்தம்மன், துர்கையம்மன், மாரியம்மன் போன்ற பல்வேறு கிராம தெய்வங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சில கோயில்கள் உள்ளன. எமது ஊரில் தெளிவான நீரைக் கொண்ட ஒரு பெரிய கோவில் குளம் உள்ளது. அதற்கு அருகில் ஸ்ரீ ராமர் கோவில் கொண்ட மிகப் பழமையான கோயில் உள்ளது. எனது படிப்பு மற்றும் வேலைக்காக நான் எதிர்காலத்தில் நகரத்திற்குச் செல்லலாம் என்றாலும், என்னை எப்போதும் தாலாட்டும் மற்றும் எனது வாழ்க்கைப் பயணத்தில் என்னை ஊக்குவிக்கும் என் தொட்டிலாக எனது கிராமத்தைதான் நான் எப்போதும் கருதுகிறேன்.
My Village Essay in Tamil
The place of our birth and childhood verily feels like heaven to each one of us. Life is unforgettable during childhood and the memories that out native village or town gave us stands forever in our memories. My village has nurtured my growth and shaped me as a person. I am always thankful to my village and take pride in inheriting the most wonderful tradition of our village. It is my pleasure to pen this essay about my village (engal oor) – Echanoor in the Kancheepuram District of Tamil Nadu.
Echanoor by its name might not be famous on the map, nevertheless, it has produced some remarkable people who has shined in different walks of life. Echanoor is a small village with about 200 houses. Ours is an agricultural community with the majority of the population engaged in agriculture, farming and other allied activities.
Echanoor is surrounded by three lakes on its three sides and in the other side there are small villages and hamlets stretching till the district highway at about a mile’s distance. There are six streets in total in the village. The type of houses in Echanoor range from coconut leaf huts to tiled houses to brick and concrete constructions.
In our village there are quite a few temples dedicated to different village deities like Poovathamman, Durgaiyamman, and Mariyamman. There is a big pond of crystal clear water serving as the temple tank. Adjacent to it is a very old temple dedicated to Lord Ram. Though I might move out to the city in future for my studies and work, I always deem my village as my cradle that can comfort me forever and inspire me with my life’s journey.
அழகான பதிவு மேலும் தொடரவும்