இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு
மாணவப்பருவம் ஒரு அருமையான பருவம். மாணவப்பருவத்தின் முதற் கடமை கல்வி கற்றல் மற்றும் ஒரு நல்ல, ஆரோக்கியமான, பயனுள்ள மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளுதல் மற்றும் வளர்த்துக்கொள்ளுதல்தான். ஆயினும் வயதிணைக் காரணம் கட்டி மாணவர்கள் இந்த சமுதாயத்திற்கு தமது கடமைகளை தட்டிக் கழிக்க இயலாது. இந்தக் கட்டுரையில் இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்பதை பற்றிக் காண்போம்.
இன்றைய சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு
மாணவப் பருவம் ஒரு மகத்தான பருவம். மாணவப் பருவத்தின்போது மாணவர்களின் தேவை, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் மாணவர்களது பெற்றோரும் இந்த சமுதாயமும் பார்த்துக்கொள்ளுகின்றனர். அதனால் மாணவர்களது முழுமுதற் கடமை தாம் கற்கும் கல்வியில் முழு கவனம் செலுத்தி ஒரு தரமான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டிய எல்லாவற்றையும் ஈட்டிக்கொள்ளுதலே அவர்களின் முதல் பணி.
மாணவப் பருவத்தில் மாணவர்கள் தனது இளமைப் பருவதைக் காரணம் கட்டி தமது பொறுப்புக்களை தட்டிக் கழிக்கக்கூடாது. இந்த சமுயதாயத்திற்கு மாணவர்களும் பலவகைகளில் தமது கடமைகளை ஆற்றலாம்.
நாட்டு நடப்புகளை மிக முக்கியமாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை சுற்றி உள்ள சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிதல் மிக முக்கியமான கடமையாகும். இதனால் தான் தனது சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து அதற்குத் தேவையானவற்றை தன்னிடம் வளர்த்துக்கொள்ள முடியும்.
மாணவர்கள் தமது ஒய்வு நேரத்தில் இந்த சமுதாயத்திற்கு பல நல்ல சேவைகளையும் பங்களிப்பையும் ஆற்ற முடியும். தன்னை சுற்றியுள்ள சமுதாயத்தில் என்னென்ன பணிகள் தேவைப்படுகிறதோ அவற்றில் ஈடுபட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும்.
மாணவப் பருவத்தில் காலத்தை வீணாக்காமல் செல்போன், பயனில்லாத விளையாட்டுக்கள் என்று பொழுதை விரயம் செய்யாமல் உடல் நலம் பேணி, உள்ளதை செம்மையாக்கி, நல்ல குணங்களையும் திறமைகளையும் வளர்த்தல் மாணவப்பருவத்தை மிக சரியான பாதையில் நடத்த சிறந்த வழியாகும்.
The Role of Students In The Present Day World Essay
A student life is a wonderful period in life. The prime responsibility of students is to learn and equip themselves with all those skills and abilities that will put them through their life in a successful way. Students cannot shun their responsibilities by saying they are young and helpless. In this essay let us discuss the roles of students in the present day world.
The phase of a student’s life is a glorious time. During the student phase, the needs, protection and life’s necessities of the students are taken care and fulfilled by the parents and the society. Hence it is the prime duty of the students to focus on the education they learn and prepare themselves for a successful and purposeful life.
Students should not shun their responsibilities by saying that they are too young to think of such topics. In fact, with a proper planning, students can give their bit to the society in several ways.
Students must first equip themselves with the knowledge of the current happenings. In this way, they can equip themselves to play their roles in the society in a better way.
During their free time, students must participate in some useful social service activities. They can think of activities that can make the lie around them better.
Students must not waste the precious time of their childhood and youth. Spending time in useless games and gadgets must be controlled. Instead, students must focus on ways to develop their abilities, talents, health, skills and knowledge in different ways using all that is available around them in the society. This is the right approach to spend the student life in a useful way.