கல்வி கட்டுரை
இந்த உலகில் தோன்றியுள்ள எண்பத்து நான்கு லட்சம் ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே ஆறறிவு படைத்தவனாயிருக்கிறான். மனிதனின் அறிவு சிந்திக்கும் திறனையும் படைப்பாற்றலையும் பெற்றுள்ளது. பிற விலங்கினங்கள் இயற்கையினின்றே கற்கும்போது, மனிதன் மட்டுமே கல்வி என்னும் அமைப்பின் மூலம் பலவகையான திறன்களையும் அறிவினையும் வளர்த்துக் கொள்கிறான். இந்தக் கட்டுரையில் கல்வியைப் பற்றிக் காண்போம்.
கல்வி கட்டுரை
“கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே”
என்றார் அவ்வையார். இதன் பொருள், கல்வி கற்றல் தவிர்க்க முடியாத மிக முக்கியமான ஒன்று. ஒருவன் பிச்சை எடுத்து தனது வாழ்வை நடத்துபவனாக இருந்தாலும் கற்பதை தவிர்க்க கூடாது என்பதுதான். இதிலிருந்து கல்வி ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று நாம் உணர்கிறோம்.
கல்வியை எப்படிக் கற்க வேண்டும் என்பதற்கு நாலடியாரில் வரும் ஒரு அழகான பாடல் ஒரு அருமையான விளக்கத்தை தருகிறது.
கல்வி கரையில; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; – தெள்ளிதின்
ஆராய்ந்த் தமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.
நாம் கற்க வேண்டிய புத்தகங்கள் எல்லையில்லா எண்ணிக்கையில் உள்ளன. ஆனால் நமது வாழ்நாட்களோ மிகவும் குறைவு. எனவே நாம் கற்கும்போது எப்படி ஒரு அன்னப் பறவை நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ அப்படி நல்ல நுல்களைத் தேர்வு செய்து நாம் கற்று நமது அறிவினைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பாடலின் கருத்து.
“கல்வி ஒன்றே இந்த உலகை மற்றவல்ல சக்தி வாய்ந்த ஆயுதம்”, என்று நெல்சன் மண்டேலா கூறுகிறார். கல்வி கற்பதன் மூலம் ஒரு மனிதன் முழுமை பெறுகிறான். இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை அறிகிறான். தனது திறன்களை எப்படி மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்கிறான். இவ்வாறு கல்வியின் மூலம் மனிதன் வாழ்க்கையில் பல சாதனைகளை செய்யவும், சிறப்பான நிலைகளுக்கு வளரவும் ஏதுவாகிறது.
நாம் வாழ்க்கையில் கல்வியை மட்டும் நாடாது அதோடு கூட நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன்முலம் நாம் நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இதுவாவது மட்டுமில்லாமல் இந்த உலகமும் நம்மால் நலம் பெறும்.
Education Essay
Among the eighty four lakhs of species born on this earth, only man has six senses. Man’s intelligence enables him to think and create. When other animals learn from nature, man is the only organism on this earth who has a system called education. Through education man fosters his knowledge and develops his skills.
Avvaiyar said, “It is good to educate one self. Even is one has to beg for his livelihood, one cannot shun away the importance of education.” From this statement, we learn how important education is for a man.
A poem in Naladiyar says how to learn education.
Our life is short and the knowledge is oceanic. Hence like a swan that separates milk from water while consuming it, we must also pick good books and enhance our knowledge.
Nelson Mandela said, “Only Education has the power of changing this world”. Only by learning, a man becomes a complete being. He learns how to live on this earth. Through education, a man can develop his knowledge and understanding of this world. in this way, through education, man can develop his body, mind, skills and abilities and attain exalted heights in life.
In our life, it is essential to learn. In addition, we must also cultivate good habits and morals. By becoming moral beings, we can help ourselves and the world in a better way.