இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் தினம் எப்படி தோன்றியது என்பது ஒரு சுவையான வரலாறு. மனிதருள் மாணிக்கம் என்றழைக்கப்படும் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்தார். அண்ணல் காந்தியடிகளோடு இணைந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. ஜவஹர்லால் நேரு இந்திய வரலாற்றில் ஒரு தியாகியாகவும் சுதந்திர இந்தியாவை வடிவமைத்த ஒரு சிற்பியாகவும் பார்க்கப்படுகிறார்.
பண்டித ஜவஹர்லால் நேரு நவம்பர் 14, 1889 ஆம் ஆண்டு பிறந்தார். நேருவுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிரியம். அதனால் அவரது பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டாட வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் நாள் குழந்தைகள் தினமாக இந்தியாவில் கொண்டாடப் படுகிறது. குழந்தைகள் பண்டித ஜவஹர்லால் நேருவை மிகவும் அன்புடன் நேரு மாமா என்று அழைத்து மகிழ்ந்தனர். குழந்தைகள் தினத்தன்று நேரு அவர்கள் செய்த அளப்பரும் தியாகம் மற்றும் பணிகளை நினைவு கூரும் நாள் ஆகும்.
குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளிலும் பொது இடங்களிலும் அரசு சார்பாகவும் விழாக் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. குழந்தைகளுக்கு பல போட்டிகள் நடத்தப் பெற்று அவர்களது பன்முகத் திறமைகளை வளர்க்கும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
நாம் குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்வது மட்டுமில்லாமல் இந்த அரிய நாளை நமது தேச பக்தியை வளர்த்துக் கொள்ளும் நாளாகக் காண வேண்டும். நாம் பிறந்த இந்த தேசத்திற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்தித்து நமது கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பான முறையில் ஆற்றிட இந்த நாள் வழி செய்ய வேண்டும்.
இந்த பாரத பூமியில் தோன்றிய தவப் புதல்வர்கள் ஏராளம். பல சான்றோர்கள் பல்வேறு வகைகளில் இந்த தேசத்திற்கு தமது அரிய பங்களிப்பினை செய்துள்ளார்கள். அப்படிப் பட்டவர்களின் வழி நடந்து நாமும் சீரிய பல பணிகளை ஆற்றுவோமாக.
Children’s Day Essay in Tamil
In India, year on year, November 14 is celebrated as Children’s day. How this day came about is an interesting history. Pundit Jawaharlal Nehru was the first Prime Minister of India. He is described as a gem among humans. He joined Gandhi and participated in India’s freedom struggle. In the scene of Indian freedom struggle, Nehru is seen as a patriot and a sculptor who designed free India.
Pundit Jawaharlal Nehru was born on November 14, 1889. Nehru was very fond of children. Therefore, he desired that his birthday must be celebrated as Children’s Day. Therefore, every year, November 14 is observed as Children’s Day. Children used to very fondly call him as Uncle Nehru. Children’s day is the time when Nehru’s sacrifice and commendable works in nation building must be remembered.
On Children’s Day, schools, public institutions and the government organize special celebrations. Competitions are conducted for children to develop their multi-talents.
It is not enough that we celebrate Children’s day. We must use this wonderful day to develop our patriotism. This day must be utilized to discuss topics like how must we discharge our duties and responsibilities towards our Motherland.
This noble land has given birth to countless great personalities. A lot of noble men and women have given their contribution to the development of India in different ways. We must tread the paths of such people and give our best to our Motherland.