நூலகம் கட்டுரை
நூலகம் நமது அறிவின் சாளரம். ஒரு நூலகத்தில் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன. எனவே நாம் பல்வேறு துறைகளில் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏதுவாகிறது. நூலகத்தின் சிறப்புகளை பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
நூலகம் கட்டுரை
நூலகம் நூல் நிலையம் என்றும் அழைக்கப்படும். நூல்கள் நிறைந்திருப்பதால் இதை நூலகம் என்று அழைக்கிறோம். நூலகத்தை அறிவின் சாளரம் என்று கூறலாம். ஒரு நூலகத்தில் பல்வேறு துறைகளுக்கான நூல்கள் காணக்கிடைப்பதால் நமது அறிவினைப் பெருக்கிக் கொள்ள நூலகம் அருந்துணை செய்கிறது.
ஒரு நூலகம் பல்வேறு விதமான தகவல் சேமிப்பு ஊடகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு நூல் நிலையத்தில் நாம் புத்தகங்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், கையால் எழுதிய குறிப்பேடுகள், குறு வட்டுகள், டிஜிட்டல் சேமிப்பு சாதனங்கள் ஆகியவற்றைக் காணலாம்.
நூலகங்கள் தேவையுள்ளோர் படித்துப் பயன்பெறும் வகையில் அனுமதி வழங்குகின்றன. ஒரு நூல் நிலையத்தின் நிர்வாகியை நூலகர் என்று கூறுவர். ஒரு நூல் நிலையத்தில் பல நூலகர்கள் இருக்கும் பட்சத்தில் ஒருவர் தலைமை நூலகராகவும், மற்றோர் அவரின் தலைமையின் கீழும் பணி செய்வர். இது தவிர புத்தகங்களை அலமாரிகளில் சரி செய்யவும், அடுக்கவும், தூய்மை செய்யவும் உதவும் தொழிலாளர்களும் அங்கு காணப் பெறுவர்.
பல்வேறு வகையிலான நூலகங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூல் நிலையம் அமைந்திருக்கும். இந்த நூல் நிலையம் அந்த ஊர்ப் பஞ்சாயத்தின் கீழ் செயல்படும். இது தவிர மாவட்ட மற்றும் மாநில அளவிலான நூல் நிலையங்களும் உண்டு. தேசிய அளவிலான நூலகங்கள் பெரும் சிறப்பு வாய்ந்தவை.
நூலகங்கள் அங்கு அமர்ந்து படிப்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் மட்டுமின்றி தமது வீடுகளுக்கோ பணியிடங்களுக்கோ நூல்களை பெற்று, கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்குகின்றன. நூலகத்தின் உறுப்பினர்களுக்கு இந்த வசதி கிடைக்கிறது.
நூல் நிலையங்கள் நம்மால் தேடிக் கண்டுபிடித்து வாங்க முடியாத புத்தகங்களை ஓரிடத்தில் நாம் கண்டு, படித்துப் பயன்பெறும் வகையில் சேமித்து, வகைப்படுத்தி வைத்து நமக்கு பேருதவி செய்கின்றன.
நூலகங்கள் நமக்கு பொழுதுபோக்க, கற்க, ஆராய்ச்சி செய்ய, தகவல் சேமிக்க, அறிவை வளர்த்துக்கொள்ள மற்றும் பல்வேறு துறைகளில் தனிப்பட்ட முறையில் நமது திறமைகளைப் பெருக்கிக் கொள்ள உதவுகின்றன. நூலகங்களை நன்கு பயன்படுத்தி வாழ்வில் உயருவோம்.
Noolagam Katturai–Library Essay
A library has a big collection of books and hence it is called a library. We can call a library, the window to knowledge. In a library, we find books of different knowledge fields. Hence libraries play a vital role in enhancing our knowledge.
In a library, we not only find books, but also different kinds of information storage media. In a library, we can find books, magazines, weeklies, dailies, monthlies, manuscripts, CDs, digital storage devices, and others that provide access to knowledge and information.
Libraries provide access to knowledge seekers so that they can benefit from the books and sources of information they find there. There is a librarian in every library. If there are many librarians, there will be a head-librarian and others functioning under him. In addition, we may also see some assistants who render help in sorting and arranging the books and cleaning the library.
There are different kinds of libraries. In every village, we can find a small library which functions under the control of the village panchayat. There are district level, state level, and national level libraries.
In a library, the readers can sit and read books. Over and above, libraries also permit people to rent the books and take to their homes or workplaces. Such facilities are extended to the members of a given library.
In a library, we find a huge number of books that we cannot buy or search and get in the outside world. Libraries sort the books and store them in one place so that we can benefit from them easily.
Libraries help us to spend our leisure, research, gather information, enhance our knowledge, and develop ourselves in different fields. We must make the best use of libraries to grow in our life.