நூல் என்றால் புத்தகம் என்றும், அகம் என்றால் வீடு என்றும் பொருள் படும். நூலகம் என்பதற்கு புத்தகங்களின் வீடு என்பது பொருள். நூலகம் மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான சாளரம். நாம் ஓரளவிற்குத்தான் புத்தகங்களை வாங்க இயலும், அதற்கு மேல் நமது அறிவினை வளர்த்துக் கொள்ள ஏற்ற இடம் நூலகமே. ஒவ்வொரு ஊரிலும் அரசின் நூலகங்கள் உள்ளன. பல கிராமங்களில் கூட நூலகங்கள் செயல்படுகின்றன.
பல அரசு நூலகங்கள் இலவசமாக நூல்களை படிக்கவும், வீடுகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தவும் வழி செய்கின்றன. சில நூலகங்களில் அங்கத்தினராக ஒரு சிறு தொகையை செலுத்த வேண்டும். ஆயினும், நூலகங்களின் பயன்களை நோக்கும்போது நூலகங்களுக்காக நாம் செலவு செய்யும் தொகை ஒரு பொருட்டே அல்ல. ஒரு நூலகத்தில் உள்ள அனைத்துப் புத்தகங்களையும் நாம் வாங்க வேண்டும் என்றால் அது பெரும்பாலானோருக்கு ஆகாத காரியம். அதைவிட, நூல்கள் வாங்குவது மட்டுமில்லாமல் அவற்றை சேமித்து, பராமரித்து வைக்க இடம் தயார் செய்வது அதைவிடப் பெரிய காரியம். இந்த வகையில் நோக்கும்போது நூலகங்கள் நம் வாழ்வின் அரிய பொக்கிஷங்கள்.
நூல்கள் பலவகைப்படும். சில நூல்கள் அறிவினை வளர்த்துக் கொள்ளவும், சில நூல்கள் பொழுது போக்கிற்காகவும், சில நூல்கள் சில தனிப்பட்ட துறைகளில் தகவல்களை சேகரிக்கவும் பயன்படுகின்றன. நாம் நமது தேவைக்கு ஏற்றபடி நூலகத்தை முறையாகப் பயன்படுத்த வேண்டும். அப்படி செய்தால் நமது நேரம் பயனுள்ள வகையில் செலவாகும். நூலகத்தில் நாம் செலவு செய்யும் நேரம் நமது வாழ்க்கைக்கு நாம் கொடுக்கும் முக்கியமான மூலதனம்.
நம் வாழ்க்கையில் நாம் பல தரப்பட்ட நிகழ்ச்சிகளைக் காணுகிறோம். பொதுவாக திருமணம், பிறந்தநாள் மற்றும் பல நிகழ்ச்சிகளின்போது பரிசுகள் கொடுப்பது வழக்கம். சில நாட்களில் உடைந்துவிடும் பொருட்களைக் கொடுப்பதைவிட புத்தகங்களை பரிசாக வழங்குவது ஒரு நல்ல செயல்.
சிலர் தமது வீட்டில் சிறிய அளவிலான நூலகங்களை வைத்திருக்க விரும்புகின்றனர். இந்த வகையிலான அமைப்புகள் அவர்களுக்கு மட்டுமில்லாது, அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர், மற்றும் விருந்தினர் என்று பலருக்கும் உபயோகப்படும்.
நூலகங்கள் நமது சமுதாயத்தின் மிக முக்கியமான அங்கங்கள். நாம் நூலகங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமில்லாமல் நம்மாலியன்ற புத்தகங்களை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினால் அது பிறருக்கும் உபயோகப்படும்.
Library Essay in Tamil
The Tamil word “Nool” means book and “Agam” means home. Library means the home of books. The library is an important window for the development of human knowledge. We can only buy books to some extent, therefore, a library is the best place to develop our knowledge. There are government libraries in every town. Libraries are also functioning in many villages.
Many government libraries offer free reading and permit taking books to homes for reading them at leisure. Some libraries require a small fee to become a member. However, when it comes to the benefits of libraries, the amount we spend on libraries is not an issue. If we were to buy all the books in a library it would not be possible for most people. More than that, it is even more difficult to find a place to store the books and also maintain them safely and in an orderly manner. In this sense, libraries are the rare treasures of our lives.
Books differ in their context and application. Some texts are used to develop knowledge, some texts are used for entertainment and some texts are used to gather information in some specialized fields. We must use the library properly to suit our needs. Doing so will let us use our time effectively. The time we spend in the library is the most important capital investment we make to enrich our lives.
In our lives, we see many types of events. Gifts are usually given at weddings, birthdays, and other occasions. Giving books as a gift is a better act than giving away items that will break in a few days.
Some people like to have small libraries in their homes. These types of systems are useful not only for them, but also for their family, friends, relatives, and guests.
Libraries are the most important part of our society. Not only do we make good use of libraries but if we donate books to libraries, it will be of use to others.