சங்க இலக்கியம் கட்டுரை
கிறிஸ்துவிற்கு முன் தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கிய நூல்களை சங்க இலக்கியங்கள் என்று கூறுகிறோம். சங்க இலக்கியங்கள் பல்வேறு வகைப்பட்ட தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புலவர்களால் இயற்றப்பட்ட நூல்களின் தொகுப்பாகும். இந்தக் கட்டுரையில் சங்க இலக்கியங்களைப் பற்றி காண்போம்.
சங்க இலக்கியம் கட்டுரை
தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டு தொகுக்கப்பட்ட சங்க இலக்கியப் படைப்புகள் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களின் தொகுப்பு ஆகும். சங்கத் புலவர்களில் பல்வேறு தொழில்களை செய்தோர், மன்னர்கள் மற்றும் பெண்களும் அடங்குவர். சங்க இலக்கிய நூல்கள் அந்தப் புலவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. சங்க இலக்கியத்தின் பல்வேறு தலைப்புகளில் காதல், போர், வீரம், வணிகம், ஆட்சிமுறை, பக்தி ஆகியன அடங்கும்.
முதன் முதலாக சங்க இலக்கியங்களை தொகுத்து அச்சுறு தந்ததில் பெரும் பங்கு மாற்றியவர்கள் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை மற்றும் உ. வே. சாமிநாதையர் ஆகியோராவர்.
சங்க இலக்கியங்கள் வகையைச் சேர்ந்த நூல்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை மற்றும் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் எனப்படும்.
சங்க இலக்கியம் உன்னதமான தமிழ்க் கலாச்சாரத்தின் உயரிய பொக்கிஷம். இது நமது தமிழ் மண்ணின் முன்னோர்களது வாழ்க்கையையும், நாகரீகத்தையும், இலக்கிய மற்றும் மொழிப்புலமையையும், அறிவியல், சமுதாய, பொருளாதார, ஆட்சிமுறை திறன்களையும் சிந்தனைகளையும் நமக்கு இன்றைக்கும் எடுத்துக் காட்டி நமது கலாச்சாரத்தின் பெருமையை இந்த உலகிற்குப் பறை சாற்றுகிறது.
பத்துப்பாட்டு நூல்கள்:
- திருமுருகாற்றுப்படை
- பொருநராற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- பெரும்பாணாற்றுப்படை
- நெடுநல்வாடை
- குறிஞ்சிப்பாட்டு
- முல்லைப்பாட்டு
- மதுரைக் காஞ்சி
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்:
- திருக்குறள்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- களவழி நாற்பது
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக் காஞ்சி
- ஏலாதி
- கார் நாற்பது
- ஐந்திணை ஐம்பது
- திணைமொழி ஐம்பது
- ஐந்திணை எழுபது
- திணைமாலை நூற்றைம்பது
- கைந்நிலை
- நாலடியார்
எட்டுத்தொகை நூல்கள்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- கலித்தொகை
- அகநானூறு
- புறநானூறு
Sanga Ilakkiyam Katturai
Sanga ilakkiyam refers to the collection of literature in Tamil written in the pre-christian era. Sanga ilakkiyam consists of all those pieces of literary works written by hundreds of poets in various topics. In this essay, we learn something about sanga ilakkiyam.
Till date, the works of 473 poets have been found and compiled under sanga ilakkiyam which consists of 2381 poems. Among sanga poets, there were women, people of different professions, and even kings. Sanga ilakkiyam literature reflects the life, culture, and accomplishments of the people of those times. The various topics of sangam literature are love, devotion, valor, business, governance, and others.
For the first time, the works of sanga ilakkiyam were compiled and published in printed form by C.V Saminathan pillai and U.V Saminathaiyar.
Sanga ilakkiyam works have been classified under three heads namely pathupattu, ettuthogai and pathinen kizhkanakku nulgal.
Sanga ilakkiyam is indeed a rare treasure house of the ancient Tamil culture. It reflects the life, governance, accomplishments, and culture of the people of ancient Tamil society and proclaims the greatness of this ancient culture to the whole world.
Pathupattu literature
- Thirumugatruppadai
- Porunaratruppadai
- Sirupaanatruppadai
- Perumpanatruppadai
- Nedunalvaadai
- Kurinchippattu
- Mullaippattu
- Mathurai kanchi
- Pattinappalai
- Malaipadukadaam
Pathinen kizhkanakku literature
- Thirukkural
- Nanmanikkadigai
- Inna narpathu
- Iniyavai narpathu
- Kalavazhi narpathu
- Thirikadugam
- Acharak kovai
- Pazhamozhi nanuru
- Sirupanchamulam
- Muthumozhi kanchi
- Elathi
- Kaar narpathu
- Ainthinai aimbathu
- Thinaimozhi aimbathu
- Ainthinai ezhupathu
- Thinaimalai nutraimbathu
- Kannilai
- Naladiyaar
Ettuthogai literature:
- Natrinai
- Kurunthogai
- Ainkurunuru
- Pathitrupathu
- Paripadal
- Kalithogai
- Agananuru
- Purananuru