தமிழ் இலக்கியம் கட்டுரை
தமிழ் இலக்கியம் உலகின் மிகத் தொன்மையான இலக்கியமாகும். தமிழ் இலக்கியம் தமிழரின் உன்னதமான கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரும் சான்று ஆகும். தமிழ் இலக்கியத்தைப் பற்றி சில பயனுள்ள தகவல்களை இந்தக் கட்டுரையில் காண்போம்.
தமிழ் இலக்கியம் கட்டுரை
தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டது. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து ஓங்கி வளர்ந்து வந்துள்ளது.
மரபு வழியாக நோக்குகையில் தமிழ் மொழியில் சுமார் 96 வகையான நூல் வகைகள் உண்டு. தற்காலத்தில் மரபு இலக்கியங்களுடன் பல்வேறு புதிய இலக்கிய வகைகளும் சேர்ந்து தமிழ் இலக்கியம் அகன்று விரிந்து கொண்டே செல்கிறது.
பண்டைக் காலத்தில் இந்தத் தமிழ் மண்ணில் வாழ்ந்த தமிழ் புலவர்கள் காலத்தால் அழியாத மிகச் சிறந்த நூல்கள் பலவற்றை நமக்கென விட்டுச் சென்றுள்ளனர். தமிழில் நாம் இன்று காணும் இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையானவை சங்க இலக்கியங்களே ஆகும்.
தொன்று தொட்ட காலம் முதல் இன்று வரை நாம் காணும் தமிழ் இலக்கியங்களை பின் வருமாறு வகைப் படுத்தலாம். இந்த இலக்கியங்கள் உருவான கால அளவைஅடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட இந்த வகைப்பாடு திரு மு. வரதராசரனாரின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் காணப்படுகிறது.
பழங்காலத் தமிழ் இலக்கியம்
- சங்க இலக்கியம் (கிமு 300 – கிபி 300 காலத்தில் இயற்றப்பட்டவை)
- நீதி இலக்கியம் (கிபி 300 – கிபி 500 காலத்தில் இயற்றப்பட்டவை)
இடைக்காலத் தமிழ் இலக்கியம்
- பக்தி இலக்கியம் (கிபி 700 – கிபி 900 காலத்தை சேர்ந்தவை)
- காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200 கால அளவிற்குள் இயற்றப்பட்டவை)
- உரைநூல்கள் (கிபி 1200 – கிபி 1500 காலத்தில் எழுதப்பட்டவை)
- புராண இலக்கியம் (கிபி 1500 – கிபி 1800 காலத்தைச் சேர்ந்தவை)
- புராணங்கள், தலபுராணங்கள்
- இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
தற்கால இலக்கியம் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
- கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
- புதினம்
தற்கால இலக்கியம் – இருபதாம் நூற்றாண்டு
- கட்டுரை
- சிறுகதை
- புதுக்கவிதை
- ஆராய்ச்சிக் கட்டுரை
பண்டைக் காலம் முதல் இன்று வரை தமிழ் இலக்கியம் தன்னிகரற்ற வகையில் வளர்ந்து செழித்து காலத்தால் அழியாத பற்பல அறிய படைப்புகளை இந்த உலகிற்கு வழங்கி தமிழரது உன்னதமான பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இந்த உலகிற்குப் பறை சாற்றுகிறது.
Thamil Ilakkiyam Katturai–Tamil literature Essay
Tamil literature is one of the most ancient on this earth. Tamil literature is the living proof to the incredible Tamil heritage and culture. Let us look at some interesting facts about Tamil literature.
Tamil literature has a continuous history of over two thousand years. During different times, Tamil literature had different flavors and followed different trends and had grown over the centuries.
Looked from the traditional perspective, Tamil literary works featured over 96 types of literary works. Today the newer types are added with them and Tamil literature has grown into a huge treasure house of multifaceted creations.
The poets of the ancient Tamil land have left behind a treasure of immortal works the most ancient works written in Tamil were part of the Sangam literature.
The Tamil literary works composed from those times can be organized under the following classification. This classification is found in the book Tamil Ilakkiyam written by M. Varadarajan.
Ancient Tamil literature
- Sanga Ilakkiyam (Written between 300 BC to 300 AD)
- Moral literature (Composed between 300 AD and 500 AD)
Medieval Tamil literature
- Devotional literature (belong to the period from 700 AD and 900 AD)
- Epic literature (composed during the period 900 AD to 1200 AD)
- Expository works (written between 1200 AD and 1500 AD)
- Puranas (1500 AD and 1800 AD)
- Puranas and Temple literature
- Islamite literature in Tamil
Modern Tamil literature of nineteenth century
- Christian literature in Tamil
- Novels
Modern Tamil literature of twentieth century
- Essays
- Short stories
- Modern poetry
- Research essays
From the times immemorial to this day, Tamil literary tradition has produced a treasure of immortal works that are based on myriad trends and versatile contexts. Tamil literature in totality proclaims the greatness of Tamil culture and tradition to this whole world.