Disability is not in the mind
Once a small boy wanted to buy a puppy. He approached a pet shop and asked for the price of a puppy. The shopkeeper said there were puppies from Rs.200 to Rs.1000. The boy showed a small puppy and asked why it was struggling to walk. The shopkeeper said the puppy was disabled for life and it cannot walk properly forever. The boy said he would prefer buying that puppy. The shopkeeper said no one else was willing to buy that disabled puppy and if the boy wanted to buy it, he would give it for free.
The boy refused and uncovered his legs to show that he too was disabled and was walking on
ஊனம் மனதில் இல்லை
ஒரு சமயம் ஒரு சிறுவன் நாய்க் குட்டி ஒன்று வாங்க ஆசைப்பட்டு ஒரு நாய்கள் விற்கும் கடைக்கு சென்றான். அங்கிருந்த விற்பனையாளரிடம் ஒரு சிறு நாய்க்குட்டியின் விலை என்ன என்று கேட்டான். அந்தக் கடைக்காரர் 200 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரை பல விதமான நாய்க்குட்டிகள் இருப்பதாகக் கூறினார்.
அந்த சிறுவன் அங்கிருந்த நாய்க் குட்டிகளைப் பார்த்து அதில் ஒரு சிறிய நாய்க்குட்டி ஏன் சிரமப் பட்டு நடக்கிறது என்று கேட்டான். அந்தக் கடைக் காரரும் அது ஒரு ஊனமுற்ற நாய்க் குட்டி அதனால் நன்றாக நடக்க முடியாது. அதை வாங்க யாரும் தயாராக இல்லை என்று கூறினார். அந்த சிறுவன் ஐயா எனக்கு இந்த நாய்க்குட்டி தான் வேண்டும் தருவீர்களா என்று கேட்டான். அந்தக் கடைக்காரர் அந்த ஊனமுற்ற நாய்க் குட்டியை எடுத்துச் செல்வதாயிருந்தால் அதை இலவசமாகவே தருவதாகக் கூறினார்.
அந்த சிறுவன் மறுத்து விட்டுத் தான் அணிந்திருந்த கால் சட்டையைத் தூக்கிக் காண்பித்தான். அந்த சிறுவனுக்கும் கால் ஊனம். அதனால் அவனுக்கு நடப்பதற்கு செயற்கைக் கால் பொருத்தப் பட்டிருந்தது. அந்த சிறுவன் கூறினான். ஐயா ஊனம் இருப்பதால் அந்த நாயின் விலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். நானும் ஊனமுற்றவன்தான். எங்களுக்கு உடலில்தான் ஊனமே தவிர மனதில் ஊனம் இல்லை. எனவே ஊனமுற்ற இந்த நாய் மற்ற நாய்களைவிட எந்த விதத்திலும் மதிப்பில் குறைந்தது இல்லை. எனவே நான் அதற்கான சரியான விலையைக் கொடுத்து அதை வாங்கி கொள்கிறேன் என்று கூறி அந்த நாய்க் குட்டியை வாங்கிச் சென்றான்.