திருவள்ளுவர் கட்டுரை
தெய்வப் புலவர் என்று அழைக்கப் படும் திருவள்ளுவர் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு நிலையான புகழைத் தேடித்தந்துள்ளார். இணையில்லாத காப்பியமாம் திருக்குறளை இந்த உலகிற்குத் தந்த திருவள்ளுவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
திருவள்ளுவர் கட்டுரை
திருவள்ளுவரை சுருக்கமாக வள்ளுவர் என்றும் அழைப்பர். பிற இலக்கியங்களில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளின் செய்திகள் காணப்பெறுவதை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர் கி.மு. 400 க்கும் 100 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். திருவள்ளுவர் இயற்றிய மாபெரும் இலக்கியம் திருக்குறள் ஆகும். இது தவிர திருவள்ளுவர் வேறு இலக்கியங்கள் ஏதேனும் இயற்றினாரா என்பது தெரியவில்லை. ஆயினும் திருவள்ளுவரின் பெருமையைப் பறை சாற்றுவதற்கு திருக்குறள் ஒன்றே போதும். உலகப் பொது மறை என்று போற்றப்படும் திருக்குறள் தமிழ் மொழிக்கு உலகளாவிய புகழைத் தேடித் தந்துள்ளது. திருக்குறளில் காணப் படாத நீதிக் கருத்து இல்லை எனலாம். அந்த வகையில் ஒரு முழுமையான இலக்கியமாக திருக்குறள் இயற்றப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் புகழைப் பறை சற்றும் வகையில் பாரதியார்
“வள்ளுவன் தன்னை இவ்வுலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ் நாடு” என்று போற்றுகிறார்.
பாரதியார் மேலும் ஒரு பாடலில்
“யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்,
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை” என்றும் பாடுகிறார்.
திருவள்ளுவர் திருக்குறளில் சொல்லியுள்ள கருத்துக்களைக் கொண்டு இவர் சமண சமயத்தை சேர்ந்தவர் என்று சிலரும், சைவ சமயத்தை சேர்ந்தவர் என்று சிலரும் கூறுகின்றனர். ஆயினும் திருக்குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்கள் எவையும் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த்ததாகத் தெரியவில்லை. இனம் மொழி மதம் கடந்து இந்த உலக மாந்தருக்கு எக்காலத்திலும் பொருந்தும் நன்னெறிகளையும் வாழ்வியல் தத்துவங்களையும் திருக்குறள் கூறுகிறது.
திருவள்ளுவரைப் பெருமைப் படுத்தும் வகையில் கன்னியாகுமரி என்னும் இந்தியத் திருநாட்டின் தென்கோடி எல்லையில் திருவள்ளுவருக்கு கடலில் ஒரு பிரம்மாண்டமான சிலை அமைக்கப் பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்ததாகக் கருதப் படும் சென்னை மயிலாப்பூரில் அவருக்கு ஒரு ஆலயமும் நுங்கம்பாக்கத்தில் திருவள்ளுவருக்கு ஒரு நினைவிடமாக விளங்கும் வள்ளுவர் கோட்டமும் தமிழக அரசினால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் ஒரு மாபெரும் புலவர். இவரது கருத்துக்கள் காலத்தால் அழியாதவை. இந்த உலக மக்களால் போற்றிப் பாராட்டப்படுபவை. வள்ளுவர் சொல்லும் கருத்துக்களைக் கடை பிடிப்பதன் மூலம் நாம் வாழ்வில் சிறப்படைவோம்.
Thiruvalluvar Katturai–Thiruvalluvar Essay
Theiva pulavar (divine poet) is a title given to Thiruvalluvar, one of the greatest poets of ancient Tamil Nadu. Through his inimitable literary work called Thirukkural, Tiruvalluvar has earned an immortal fame to Tamil Nadu and Tamil language. Let us learn a few points about Thiruvalluvar in this essay.
Thiruvalluvar is shortly referred to as ‘Valluvar’ also. Based on the information mentioned in other literary works of ancient Tamil Nadu, it is considered that Thiruvalluvar could have lived in the period between 400 BC and 100 BC. The incredibly wonderful literary work of Thirukkural was authored by Thiruvalluvar. Apart from this work, what else he had written is not known clearly. However, this work is enough to gauge the greatness of this poet. Thirukkural has secured an international fame and recognition to Tamil language. There is no moral concept that is not found is Thirukkural. This is such an exhaustive work covering a wide range of interests.
Bharathiyar, a great Tamil poet says, “Tamil Nadu has secured a heavenly fame by giving Thiruvalluvar to this world”. In yet another poem, Bharathiyar says, “Among the poets that I have known, better ones than Kamban, Valluvar and Ilango were never born on this earth. This is not a mere exaggeration, but a fact”.
Based on some concepts told in Thirukkural some say he belonged to Jainism, while some others claim he belonged to Saivism. However, there are no references to any religion or sect whatsoever in Thirukkural. Overtaking the differences of creed and language, Thirukkural provides a timeless message to the entire humanity pertaining to life and morality.
In an effort to glorify Thiruvalluvar, the Tamil Nadu Government has created three monuments. One is the massive Thiruvalluvar statue installed in the sea at Kanniyakumari, the southernmost tip of India. The second is a temple at Chennai – Mylapore where Thiruvalluvar is said to have born. The third one is the monument called Valluvar Kottam in Nungambakkam, Chennai.
Thiruvalluvar was a great poet. His concepts are timeless. They are heralded by humanity at all times. By practicing the ideals propounded by Thiruvalluvar, we can prosper in our lives.