உணவு கட்டுரை
இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளருவதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம். இந்தக் கட்டுரையில் உணவைப் பற்றி சில முக்கியமான தகவல்களைக் காண்போம்.
உணவு கட்டுரை
“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” என்றார் திருமூலர். இந்த உடல் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களால் ஆனது. இந்த உடல் உயிர் வாழ்வதற்கும், வளர்வதற்கும், இயங்குவதற்கும் உணவு அவசியம்.
இந்த உலகில் தோன்றிய தாவரங்கள் மற்றும் விலங்குகள் உணவின்றி வாழ இயலாது. தாவரங்கள் தமது உணவைத்த தாமே தயாரித்துக் கொள்கின்றன. விலங்குகள் தமது உணவிற்காக தாவரங்களையோ அல்லது பிற விலங்குகளையோ சார்ந்துள்ளன.
உணவுப் பழக்கத்தை வைத்து விலங்குகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்கலாம். தாவரங்களை உண்ணும் விலங்குகள் தாவர உண்ணிகள் என்றும் விலங்குகளை உண்ணும் விலங்குகள் விலங்குண்ணிகள் என்றும் தாவரம் மற்றும் விலங்குகளை உண்ணும் விலங்குகள் அனைத்துண்ணிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மனிதர்களிடையே நாம் இந்த மூன்று வகையான உணவுப் பழக்கங்களையும் காண முடியும்.
இந்த உலகில் பெரும்பாலான மனிதர்கள் உணவை சமைத்து உண்ணும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளிலும் நாடுகளிலும் பல்வேறு விதமான சமைக்கும் முறைகள் உள்ளன.
நாம் ஆரோக்கியமாகவும் உடல் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்றால் நாம் உண்ணும் உணவு சரிவிகித உணவாக இருப்பது அவசியம். உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களையும், வைட்டமின்களையும் சரியான விகிதத்தில் கொண்டுள்ள உணவினையே நாம் சரி விகித உணவு என்று கூறுகிறோம்.
நாம் சுவையான மற்றும் சத்தான உணவினை உண்ண வேண்டும். உணவுப் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கியக் காரணியாகும். சுவையாக இருப்பதானால் பலரும் ஆரோக்கியமற்ற உணவினை உண்ணுகின்றனர். இது உடல் நலம் பாதித்து பல்வேறு உபாதைகள் உடலில் தோன்ற ஏதுவாகும். உணவுக் கட்டுப்பாடு நமக்கு மிகவும் அவசியம்.
உணவினை வீணாக்குதல் கூடாது. நம்மாலியன்ற வரையில் பிறருக்கும் உணவு கொடுத்து வாழவேண்டும். இயலாதோருக்கு உணவளிப்பது பெரும் புண்ணியத்தைத் தரும் செயல். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்றும் “தானத்தில் சிறந்தது அன்னதானம்” என்றும் கூறுவர். இந்த ஆன்றோர் வாக்குகளை மறவாது நல்ல உணவுப்பழக்கங்களை வளர்த்துக் கொள்வதுடன் தேவையுள்ளோருக்கும் உணவினை வழங்கி வாழ்வில் சிறப்படைவோம்.
Unavu Katturai–Food Essay
“By nurturing my body, I nurtured my soul”, said Thirumular, a Tamil Saint and poet. This body is made of five elements namely earth, water, fire, air, and space. For the body to live, grow and function, food is highly essential.
All those plants and animals that have born on this land cannot live without food. Plants make their own food while animals depend on plants or animals for their food.
Depending on their food habits, we can divide plants and animals into three types namely herbivores, carnivores and omnivores. Among humans, we find all these three types of food habits in humans.
Majority of humans on the earth have the habit of cooking food. Across different regions and countries, cooking styles differ.
For us to stay healthy and strong, we need to eat balanced food. The food that has all the essential nutrients in it is known as balanced food.
We must eat the food that is not only tasty but also healthy. A number of people consume unhealthy food just because of its taste. This practice will lead to spoiling our health and landing on a number of diseases. Good food habits are highly essential.
We must not waste food. As far as possible, we must also give food to others. Giving food to the needy will bring us several merits. “The person who gives food has verily given life”; “The best kind of charity is donating food” these are some good proverbs about donating food. Let us cultivate good food habits and also give food to the needy to glorify our lives.